பொதுமக்களை துவம்சம் செய்த மதம் பிடித்த யானை: 100 வீடுகள் சேதம்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (15:36 IST)
மேற்கு வங்காளம் அருகே ஊருக்குள் புகுந்து பொதுமக்களையும் தாக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய மதம் பிடித்த காட்டு யானையை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் பிடித்து காட்டுகுள் விட்டனர்.


 
 
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி வனப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த யானை ஒன்று, சிலிகுரி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து. பொதுமக்களை தாக்கியும், 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியும் உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர், மேலும், பாதை மாறியதால் ஏற்பட்ட குழப்பத்தில் அந்த யானைக்கு மதம் பிடித்து இருந்ததாகவும், அப்போது, பயங்கர சப்தத்துடன் பிளறியபடி ஊரை சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்க போராடி கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 10 மணிநேரம் போராடியும் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க முடியாமல் இருந்தனர். அந்த பகுதி மக்கள் உதவியுடன் இறுதியில் துப்பாக்கி மூலம் யானை மீது மயக்கமருந்து ஊசியை செலுத்தி மதம் பிடித்த யானையை பிடித்தனர். பின்னர், அந்த யானையை வனத்துறையினர் சிலிகுரி வனப் பகுதிக்குள் விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்