ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்யவிருக்கும் மாவட்ட ஆட்சியர்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (11:36 IST)
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மாவட்ட ஆட்சியருக்கும் டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கட்டிட பொறியியல் பட்டதாரியான ஆம்ரபாலி (25) சென்னை ஐஐடியில் படித்தார். அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்து தெலங்கானா மாநிலத்திலன் வாரங்கல் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வாரங்கல் மாவட்டத்தின் ஆட்சியரான அமர்பாலியின் பொதுச் சேவையையும், மக்களின் தேவையை துரிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றைப் பாராட்டி, அவருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல பரிசுகளை வழங்கி உள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக ஆம்ரபாலியும் டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சமீர் ஷர்மாவும் காதலித்து வந்தனர். சமீர் ஷர்மா  டாமன் டையூ பகுதியில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி, இவர்களது திருமணம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ளது. இவர்களுக்கு கும்பத்தாரும், நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்