கிங்ஃபிஷர் நிறுவனத்திடமிருந்து கடனை பெறமுடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது - வங்கி தலைவர்

திங்கள், 25 மே 2015 (19:38 IST)
கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு வழங்கிய கடனை திருமபப் பெற முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது என்று யுனைட்டட் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.
 
விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு யுனைட்டட் வங்கி உட்பட 17 வங்கிகள் சுமார் ரூ.7,500 கோடியை கடனாக வழங்கியிருந்தன. அதில் இதுவரை ரூ.1,000 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது.
 
கிங்பிஷர் நிறுவனம் கடனாக பெறும்போது சில அடமான பத்திரிங்களை வைத்தது. ஆனால், அத அடமான சொத்துகளின் மதிப்பு சில கோடி ரூபாய் மட்டுமே இருக்கும்.
 
இந்நிலையில் இது குறித்து யுனைட்ட வங்கியின் தலைவர் கூறுகையில், ”கடன் வழங்கிய மொத்த தொகையை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்த சொத்துகளிலிருந்து வெறும் வட்டி வீதத்திற்கு சமமான தொகையை மட்டுமே எங்களால் மீட்டெடுக்க முடியும்.
 
கடந்த இரு வருடங்களுக்கு உள்ள வட்டிப் பணத்தை நாங்கள் இழந்து விட்டோம். இதிலிருந்து எங்களால் வட்டிப் பணத்தை மீட்டெடுக்கலாமே தவிர, அசல் பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்