எல்.ஐ.சி நஷ்டத்தில் இயங்குகிறதா? முக்கிய விளக்கம்

வியாழன், 10 அக்டோபர் 2019 (07:22 IST)
கடந்த சில நாட்களாக எல்.ஐ.சி. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், எல்.ஐ.சி முதலீடு செய்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதால், மக்களின் முதலீடுகளுக்கு ஆபத்து என்றும், எல்.ஐ.சியின் இன்சூரன்ஸ் பணம் இனி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து எல்.ஐ.சி ஒரு விளக்கத்தை அளித்துள்ளது

எல்.ஐ.சி நஷ்டத்தில் இயங்குவதாக பரவி வரும் தவறான வதந்தி முற்றிலும் தவறானது. நாங்கள் இதனை மறுக்கிறோம், எங்கள் பாலிசிதாரர்களுக்கு அதன் நிதி நிலை நல்ல நிலையில் ஆரோக்கியமாக உள்ளது என்பதை உறுதியளிக்க விரும்புகிறோம், மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

எல்.ஐ.சி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை மட்டுமின்றி உறுதிப்படுத்தப்படாதவை. எங்கள் நிறுவனத்தின் மீது கெட்ட எண்ணத்தை விதைக்கும் நோக்கம் கொண்டவை மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தினை பொதுமக்கள் மத்தியில் மோசமாக சித்திரிப்பதற்கான முயற்சிகள்

எல்.ஐ.சி நிறுவனம் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் பாலிசிதாரர்களுக்கு அதிகபட்சமாக போனஸ் ரூ .50,000 கோடியை அறிவித்துள்ளோம்’ என்று எல்.ஐ.சி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இந்தியாவை பொருத்தவரை எல்.ஐ.சி நிறுவனம் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லாத ஒரு நிறுவனம் என்று பொருளாதார நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்