சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்க திட்டமிட்டிருந்த அவர், தொழில்நுட்ப துறையில் நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிட்டுள்ளார். மாறாக, தனது வருமானத்தின் பெரும் பகுதியை சரியான இடங்களில் முதலீடு செய்துள்ளார்.
"கையில் வேறு வேலை இல்லை என்றாலும், மாதந்தோறும் கட்ட வேண்டிய வீட்டு தவணை இல்லாதது எனக்கு பெரும் நிம்மதியைத் தருகிறது," என அவர் கூறியுள்ளார். இந்த பதிவு, இளைஞர்கள் மத்தியில் வாடகை வீடா அல்லது சொந்த வீடா? என்ற நிதி மேலாண்மை குறித்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.