மேற்கு தொடர்ச்சி மலை உயரத்தை குறைக்க வேண்டும்; வழக்கறிஞரின் வினோத மனு

புதன், 2 மே 2018 (21:29 IST)
மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வினோதமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 
ஜெய்சுகின் என்ற வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வினோதமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 
 
தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் பெய்து வரும் போதிலும் தமிழகத்துக்கு அந்த மழையால் எந்த பயனுமில்லை. இதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலைகள். தென்மேற்கு பருவ மழைக்கான மேகங்களை மேற்கு தொடர்ச்சி மலைகள் தமிழகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து விடுகின்றன.
 
இதனால் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகம் பயன் பெறுவதில்லை. தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்துக்கு மட்டும் அதிக மழைபொழிவை கொடுக்கிறது. இதனால் 3000 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. 
 
எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைத்தால் தென்மேற்கு பருவமழை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பயனளிக்கும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்