யார் அப்படி சொன்னா? கொதித்தெழுந்த குஷ்பு.. நிம்மதியடைந்த காங்கிரஸ்...

சனி, 6 ஏப்ரல் 2019 (14:42 IST)
குஷ்பு காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளார், அவர் கட்சியில் இர்ந்து விலகுகிறார் என்று பரவிய செய்திக்கு விளக்கமளித்துள்ளார்.
 
அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸில் சேர்ந்து 4 வருடங்கள் ஆகியும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இந்த தேர்தலில் தமக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் குஷ்பு. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அவருக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. நேற்று கட்சியில் வந்து இணைந்தவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும் போது இத்தனை வருடங்களாக கட்சிக்காக உழைக்கும் தமக்கு சீட் வழங்காததால் அவர் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியானது.
 
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் குஷ்பு பிரச்சாரத்திற்கு வராதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைமை மீது குஷ்புவிற்கு உள்ள கோபமே குஷ்பு பிரச்சாரத்திற்கு வராத காரணம் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் விதமாக குஷ்பு தனது டிவிட்டரில் "காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வருகிறது? இந்நாட்டை உருவாக்கிய இயக்கத்தின் ஒரு அங்கமாக நான் இருக்கிறேன். காங்கிரஸில் ஊழியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.. நாளை முதல் மாநிலங்கள் முழுவதும் பிரச்சாரம் தொடங்குகிறேன என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த காங்கிஸார் தற்போது நிம்மதியடைந்துள்ளார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்