சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும் 19 இடங்களில் மட்டுமே குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டம் மற்றும் எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டம் நடைபெற்ற நிலையில் இரண்டு கூட்டத்திற்கும் தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என குமாரசாமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எங்களை பாஜகவின் பீ டீம் என்று சிலர் அழைக்கின்றனர், ஆனால் பாஜகவின் கூட்டணி கூட எங்களுக்கு அழைப்பு வரவில்லை அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கும் அழைப்பு வரவில்லை என்று பேட்டி ஒன்றில் குமாரசாமி தெரிவித்தார்