ட்விட்டரை விடுங்க.. நம்ம கம்பெனிக்கு வாங்க! – எலான் மஸ்க்கிற்கு கொக்கி போடும் நிறுவனம்!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:22 IST)
ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைய மறுத்த நிலையில் அவருக்கு இந்திய நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றின் நிறுவனர் எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கினார்.

இதனால் ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைவாரா என்பது குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இடம்பெறுவார் என ட்விட்டர் தெரிவித்திருந்தது. ஆனால் அதை எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த சமூக வலைதள செயலியான கூ எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கூ செயலியின் நிறுவனர் அப்ரேமியா ராதாகிருஷ்ணா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “நாம் ஒருமுறை பேசுவோம். நாங்கள் இளமையும் துடிப்பும் நிறைந்த நிறுவனம். எங்களுடைய கனவுகள் பெரியது. எதிர்கால இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலை தளம் கூ தான். நீங்கள் கேட்டது போல ஜனநாயகப்பூர்வமான உறுதிப்படுத்தல் வசதி ஏற்கனவே கூ-வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்