உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் ட்விட்டர் போன்ற ஒரு சில சமூக வலைதளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கூ என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்நிறுவனம் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கூட வழங்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கவில்லை என்று தகவல் வெளியான நிலையில் இதனை கூ தரப்பும் உறுதி செய்துள்ளது. புதிதாக மூலதனத்தை திரட்டும் நோக்கில் தோல்வி அடைந்து விட்டதாகவும் அதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும் இருப்பினும் தங்கள் தளத்தின் இயக்கம், செயல்பாடுகள் முடங்காது என்றும் கூ தெரிவித்துள்ளது