பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. எல்லோருமே பாம்பு என்றால் கிடுகிடுத்துப் போய்விடுவார்கள், இந்த நிலையில், வீட்டில் வெளியில் கிடக்கும் ஷூவில் ஒவ்வொரு முறை கால்விடும் முன்பு, குழந்தைகளும், மாணவர்களும், அதைச் சோதனை செய்துவிட்டுத்தான் காலில் அணிய வேண்டும் என பலமுறை வீட்டினர் எச்சரிக்கை விடுப்பர்.
மேற்கூரியபடி மைசூரில், ஒருவர் காலணியை அணியும்போது, அதற்குள் இருந்துதன் கோரைப் பற்களை விரித்து, படமெடுத்துக் கடிக்க முயன்றது ராஜ நாகம், இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.