பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் ராஜ நாகம்: வைரல் வீடியோ!!

வியாழன், 30 மார்ச் 2017 (11:24 IST)
கர்நாடக மாநிலத்தில் ஊருக்குள் வந்த 12 அடி ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்டனர்.


 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள காய்கா கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் காட்டிலிருந்து ஊருக்குள் வந்துள்ளது.
 
பாம்பு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்தது. அந்தப் பாம்பிற்கு பயந்த பொதுமக்கள் வனத்துறைக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். காட்டிற்குள் விடுவதற்கு முன்னர் அந்த பாம்பிற்கு பாட்டிலின் மூலம் தண்ணீர் கொடுத்தனர். 
 
அந்த ராஜ நாகம் பாட்டில் தண்ணீர் பருகியது தற்போது வைரலாகி வருகிறது.
 
இதோ அந்த வீடியோ....
 

வெப்துனியாவைப் படிக்கவும்