மீண்டும் 20 ஆயிரத்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு: கேரளாவில் உச்சம்!

சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:25 IST)
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இன்று மீண்டும் 20 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கை இருப்பதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,106 என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 20,846  என்றும் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 83 என்றும் கர்நாடக மாநிலத்திலுள்ள கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 20,845 என்றும் அறிவிக்கப்பட்டது 
 
மேலும் இதுவரை கர்நாடகாவில் கொரோனாவால்  பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,428 என்றும் இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,462  என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்