ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நள்ளிரவில் மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை ஜீப்பில் இருந்து இறக்கி வைக்க ஆள் இல்லாததால், ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜமாணிக்கம், உமேஷ் ஆகியோர் அரிசி, கோதுமை, பருப்பு மூட்டைகளை தங்களின் தோளில் சுமந்து சென்று இறக்கி வைத்தனர்.