சட்டமன்ற கூட்டத்தில் நடத்தப்படும் விவாதங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் லைவ் டிவி ஒன்றை தொடங்கியுள்ளது கேரள அரசு.
இந்தியாவில் மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை விவாதங்களை நேரடியாக ஒளிபரப்ப சேனல்கள் உள்ளது. ஆனால் மாநில சட்டமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப மாநில அரசுகள் எந்த சேனலும் வைத்திருக்கவில்லை. இந்நிலையில் கேரள அரசு இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள சட்டமன்ற விவாதங்களை ஒளிபரப்ப “சபா டிவி” என்ற சேனலை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் பிணராயி விஜயன் “மாநில சட்டமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப சேனல் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை. சட்டப்பேரவை நடவடிக்கைகள் மக்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியம். இது சட்டமன்றத்தில் செயல்பாட்டை வெளிப்படை தன்மை உள்ளதாக மாற்றும்” என கூறியுள்ளார்.
சட்டமன்ற கூட்டம் தவிர தொகுதி எம்.எல்.ஏக்கள் நேர்க்காணல்கள், அமைச்சர்களின் பேட்டிகளையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.