கேரளாவில் மீண்டும் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை- காரணம் இதுதானா?

வெள்ளி, 15 மே 2020 (07:55 IST)
கேரளாவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் கேரளாவில் நிலைமை வேறாக இருக்கிறது. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த கேரளா இப்போது கொரோனா பாதிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 560 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, அவர்களில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் வெளிநாடுகளில் சோதனை இன்றி அழைத்து வரப்பட்டவர்கள்தான் என சொல்லப்படுகிறது.  வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது.

தற்போது வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸை தவிர பிற அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு அனுப்பவில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருபவர்களை அங்கேயே கொரோனா சோதனை முடித்து அழைத்துவரவேண்டும். இல்லாவிட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். அது இப்போது உண்மையாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்