சோனியா காந்தி மீது புதிய வழக்கு பதிவு

புதன், 8 ஜூன் 2016 (13:30 IST)
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மீது கேரளா மாநிலம் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
திருவனந்தபுரத்தில் செயல்படும் ஹீத்தர் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் ராஜிவ் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், ராஜிவ்காந்தி இன்ஸ்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்டிக்கொடுத்துள்ளது. இதனை கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
 
ஆனால் இந்த கட்டிடம் கட்டியதற்கான உரிய பணம் இன்னமும் வழங்கப்படவில்லை. இதற்கான பணத்தை கேட்டதற்கு, தற்போது பணம் இல்லை என அந்த நிறுவனத்தின் தலைவரும் கேரள காங்கிரஸ் தலைவருமான ரமேஸ் சென்னிதலா கூறியதாக ராஜிவ் தெரிவித்துள்ளார்.
 
இந்த பணம் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் மீது திருவனந்தபுரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்