மீன்பிடித் தடைக்காலம் விவகாரம்:மோடியுடன் உம்மண்சாண்டி சந்திப்பு

சனி, 30 மே 2015 (03:04 IST)
கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்து மனு அளித்தார்.
 
கேரளத்தில், கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மீனாகுமாரி அறிக்கையின் அடிப்படையில், மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் ஜூன் 1 முதல் ஜுலை 31 வரை நீட்டித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதற்கு, கேரள மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து மனு அளித்தார்.
 
இது குறித்து கேரள கலாசாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
கேரளத்தில் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் குறித்து மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். மேலும், 12 கடல் மைல்களுக்கு மேல் மீன்பிடிக்க தடை செய்யும் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் பேசினோம். அத்துடன், கேரளத்துக்கு தேசிய மீன்வள மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் மானியம் 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் விவாதிதோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்