நாட்டில் முதன்முறையாக கொரோனா அறிகுறி தென்பட்ட கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளன.
இதனால் கேரளாவில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றாலும் பொது போக்குவரத்து, வங்கி சேவைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் 5 நபருக்கும் மேல் ஒன்றாக சுற்றக்கூடாது என்றும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே செல்ல கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.