கோவாவில் செக்ஸ் சுற்றுலாவை அரசியல்வாதிகள் தடுக்கவில்லை : அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

புதன், 29 ஜூன் 2016 (17:51 IST)
கோவாவில் உள்ள அரசியல் கட்சிகள் செக்ஸ் சுற்றுலாவை ஊக்குவிக்கின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
சமீபத்தில் கோவா சென்றிருந்த கெஜ்ரிவால், அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பங்குதாரர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
 
சுற்றுலா தலமான கோவாவில் செக்ஸ், விபச்சாரம், போதை மருந்து போன்றவை கொடி கட்டி பறக்கிறது. அதை இங்குள்ள அரசியல் கட்சிகள் தடுக்க முன்வரவில்லை. மாறாக அதை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
 
கோவாலில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்