இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம்; பிரதமர் என்ன செய்கிறார்? : கெஜ்ரிவால் கேள்வி

சனி, 17 அக்டோபர் 2015 (15:34 IST)
டெல்லியில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் “பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் 5 வயது சிறுமியை நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் கடத்திச்சென்று, தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலையில் அப்பகுதி பூங்காவில் அச்சிறுமி மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை டெல்லி போலீஸார் கைது செய்யப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
 
இந்நிலையில்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு இன்று சென்று குழந்தைகளை  பர்வையிட்டார். மேலும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
 
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ல அரவிந்த கெஜ்ரிவால் “ டெல்லியில் சிறுமிகள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வருவது வெட்கக்கேடாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்குவதில் முழுமையாக தவறிவிட்டனர். பிரதமரும் அவரது துணைநிலை கவர்னரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்