கார்த்திக் சிதம்பரத்தின் 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

வியாழன், 11 அக்டோபர் 2018 (11:20 IST)
கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கதுறை அதிரடியாக முடக்கியுள்ளது. இந்த சொத்து முடக்கம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கை சார்ந்து நடந்துள்ளது. 
 
முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. 
 
இந்நிலையில், இன்று அமலாக்கதுறை கார்த்திக் சிதம்பரத்தின் 50 கோடிக்கும் மேல் மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்த சொத்து முடக்க நடவடிக்கையில் அசையா சொத்துக்களான வீடுகள், நிலம் போன்ரவை அடக்கம். இந்தியாவில் டெல்லி, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள நிலம் மற்றும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை சார்பில் முதற்கட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்