திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கலவரம்: விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி பலி

செவ்வாய், 10 நவம்பர் 2015 (22:18 IST)
திப்பு சுல்தான் ஜெயந்தி விழா போராட்டத்தின் போது, விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ஒருவர் பலியானார்.
 

 
கர்நாடகா தலைநகர், பெங்களூருவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட முக்கியதஸ்கர்கள் கலந்து கொண்டனர்.
 
விடுதலைப் போராட்ட வீரராக திப்பு சுல்தான் திகழ்ந்துள்ளதாக கூறி, அவரது பிறந்த நாளை கர்நாடக அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. ஆனால், திப்பு சுல்தான் ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என கூறி, இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் மடிகேரி பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
 
இதற்கு, திப்பு சுல்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
 
இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி புட்டப்பா பலியானார். மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். இதனால், கர்நாடாகாவில் மத மோதல்களும், மாநிலம் முழுவதும் மதக்கலவரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்