தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கிய கர்நாடகா போலீஸ்

திங்கள், 3 அக்டோபர் 2016 (13:50 IST)
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கர்நாடகா காவல்துறையினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.


 

 
கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினர் ஓசூர் அருகே உள்ள ஒரு ஊரில் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்த காரில் சென்றுள்ளனர்.
 
அப்போது தமிழக எல்லை ஜூஜிவாடி சோதனை சாவடியில் தமிழக காவல்துறையினர், அவர்களிடம் அடையாள அட்டை இல்லாததால் வாகனத்தை அனுமதிக்கவில்லை. 
 
இதில் ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறையினர் அத்திப்பள்ளிக்கு திரும்பி சென்றுள்ளனர். கர்நாடகா எல்லைக்குள் இருந்த தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது கற்கள் வீசியுள்ளனர். 
 
அவர்களின் வன்முறை செயலால் 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை சூப்பிரண்டு சம்பவ இடைத்திற்கு விரைந்து சென்றுள்ளார். 
 
அதன்பின்னர் கலவரம் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தமிழக காவல்துறையினர் அளித்த புகாரின்பேரில் அத்திப்பள்ளி எஸ்.ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
 
இதனால் இருமாநில எல்லையிலும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்