’இரண்டு பேர் செய்தால் கும்பல் பலாத்காரம் கிடையாது’ - கர்நாடகா அமைச்சர் சர்ச்சை பேச்சு

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:40 IST)
இரண்டு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தால் அது கும்பல் பலாத்காரம் கிடையாது என்று கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் கூறியுள்ளார்.
 

 
முன்னதாக, மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். 
 
அந்த இளம்பெண் கடந்த 3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு தனது பணியை முடித்த பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
 
அப்போது அந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும் அவரை கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
 
பின்னர், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, அவரை பேருந்திலேயே பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இது குறித்து ஜார்ஜ் கூறுகையில், “இதை எப்படி நீங்கள் கும்பல் பலாத்காரம் [Gang Rape] என்று கூறமுடியும். நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து செய்யும் பொழுதுதான் அது கும்பல் பலாத்காரம் ஆகும்.
 
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை நாங்கள் செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 
இதற்கு, தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்