மோடி மனைவியை ''கைவிட்டவர்'' காங்கிரஸ் சர்ச்சைக்குரிய கருத்து; பாஜக பதிலடி

புதன், 28 ஜனவரி 2015 (21:12 IST)
நரேந்திர மோடி மனைவியை ''கைவிட்டவர்'' என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் கமாத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
மும்பையில், மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும், கிரேட்டர் மும்பை மாநகராட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குருதாஸ் கமாத் பேசுகையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
குருதாஸ் கமாத் பேசுகையில், மோடி அவரது மனைவியை கடந்த 40 ஆண்டுகளாக கைவிட்டது மிகவும் வெட்கமானது. பிரதமர் மோடி திருமணம் ஆனவராகவே உள்ளார். அவர்கள் விவாகரத்து செய்யவில்லை. மோடி அவரது மனைவியை கைவிட்டுவிட்டார்.
 
யசோதா பென் மிகவும் நல்ல பெண்மணி. அந்த பெண், மோடிக்காக கோவில்களில் வழிபாடு செய்கிறார். பிரதமர் மோடி புதியதாக அமைச்சரவைவில் சேர்ந்துள்ள ஸ்மிரிதி இரானிக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மற்றும் பங்களாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும், பிரதமர் மோடியின் மனைவி அரசு பேருந்திலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார். படைப்பிரிவினர் கொண்ட வாகனங்கள் அவரை பின்தொடர்கிறது. பிரதமர் மோடி பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
 
மேலும் அடுத்த பக்கம்..
அவருடைய திருமண தொடர்பான காலம் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். மொத்த நாடும், தேர்தல் ஆணையமும் இதனை கண்காணித்தது. இதனால் அவர் சிக்கலை எதிர்கொண்டதால், இது நடந்தது. இதன்மூலம் அவர் நாட்டிற்கு சொல்வது என்ன?. திருமணம் செய்துக் கொள்ளுங்கள், பின்னர் கைவிட்டுவிடுங்கள் என்றா? என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
மேலும் அவர் பேசுகையில், யசோதாபென், மோடி மற்றும் அவரது குடும்பத்தினரால் கவனிக்காமல் விடப்பட்டுள்ள நிலையில், ஸ்மிரிதி இரானி மட்டும் சிறப்பாக கவனிக்கப்படுவது எதனால்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் வீட்டிற்கு திரும்புதல் (கார் வாப்சி) குறித்து பேசுகின்றனர். இது உங்களது வீட்டில் முதலில் தொடங்குங்கள், மோடி அவரது மனைவிக்கு முதலில் கார் வாப்சியை உறுதி செய்யுங்கள் என்று குருதாஸ் கமாத் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யாசோதா பென்னுடன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
காங்கிரஸ் தலைவரின் இத்தகைய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, கமாத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது.
 
"கமாத் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்த காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் நல்லறிவை இழந்துவிட்டனர். இதன் காரணமாகவே அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பாஜக தலைவர் பாத்கால்கார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்