அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார். அன்றாடமும் அவர் ஆளும் கட்சியை விமர்சித்துவரும் நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை தாக்கிப் பேசியிருந்தார். அதில், நடிகர் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சியில் கமலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே ஆளும்கட்சியிக் முதல்வர் அமைச்சர்கள் எனப்பலரும் கமலை ரவுண்டு கட்சி விமர்சித்துவரும் நிலையில், தற்போது பாஜக முன்னாள் தேசியச் செயலாளார் ஹெச்.ராஜா, கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.