உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைமறைவான கர்ணனை நேற்று கொல்கத்தா போலீசார் கோவையில் கைது செய்து இன்று கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.