ஜியா கான் மரணம் - பாலிவுட் அநீதி இழைத்துவிட்டதாக ஜியாவின் தாய் வருத்தம்

புதன், 9 ஜூலை 2014 (15:53 IST)
மர்மமான முறையில் இறந்த பாலிவுட் நடிகை ஜியா கானிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அநீதி இழைத்துவிட்டதாகவும், இதற்காக அவர்கள் வருத்தப்படுவார்கள் எனவும் ஜியா கானின் தாய் ராபியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 
பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்து நெறிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.
 
இதையடுத்து, ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஜியாவின் காதலர் சூரஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
இச்சம்பவத்திற்கு பிறகு தனது மகள், தற்கொலை செய்வில்லை, அவர் கொலை செய்யப்பட்டார் என ஜியாவின் தாய் ராபியா, சில புகைப்படங்களை வெளியிட்டார்.
 

இந்நிலையில், தன் மகளின் மரணம் குறித்து டிவிட்டரில் தெரிவித்த ராபியா,' பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஜயாவிற்கு அநீதி இழைத்துவிட்டார்கள், இதற்காக அவர்கள் வருத்தபடுவார்கள்.

ஜியா இல்லாமல் இரண்டாவது ரமலான், உங்கள் மகள் ஒருவன் கையால் கொலை செய்யப்படவில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
 

குற்றவாளியை கடவுள் தண்டிப்பார். ஏன் இந்த நாடு குற்றவாளியை காப்பாற்றுகிறது?காவல் துறையினர் ஏன் விசாரணை மேற்கொள்ளவில்லை? 
என்னிடம் என மகளுக்கு நடந்த அநீதியை நிரூபிக்க ஆதாரம் உள்ளது. அதை நீங்கள் பார்க்க வேண்டும், நான் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்