புரி ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரை துவங்கியது

ஞாயிறு, 19 ஜூலை 2015 (04:58 IST)
உலகப் புகழ் பெற்ற புரி ஜெகநாதர் கோவிலில்  ரத யாத்திரை துவங்கியது.
 

 
ஒடிசாவில், புரியில், உலகப் பிரசித்தி பெற்ற, ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 9 நாள் மிகப் பிரம்மாண்ட தேர் பவனி நடைபெறும். இதனையடுத்து, ஜெகநாதர் மற்றும் பாலபத்ரர், சுபத்ரா தேவி சிலைகள், புரி நகர் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
 
மேலும், 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுவாமி சிலைகளை மாற்றுவது வழக்கம். இதற்கு முன், 1996ஆம் ஆண்டு இந்த விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சுவாமி மற்றும் அம்மன் சிலைகள், 45 நாட்கள் தனியறையில் வைக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு,ரதங்களில் ஏற்றப்பட்டன. ரத யாத்திரையைக் காண்பதற்காகப் பூரி நகரச் சாலையின் இருமருங்கிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 
இந்த விழாவில், பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்