ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்

செவ்வாய், 19 ஜனவரி 2016 (18:24 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கணித பிழை உள்ளிட்ட 16 முக்கிய குறைபாடுகளை சுட்டி காட்டி 7 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது. 


 
 
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக 16 முக்கிய குறைபாடுகள் இருக்கிறது என்று 7 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் நீதிபதி குமாரசாமி தெரிவித்த பட்டியலின்படி ஜெயலலிதா தரப்பில் பெற்ற கடன் 10 கோடியே, 67 லட்சத்து 31,274 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், இதனை 24 கோடியே 17 லட்சத்து 31,274 ரூபாய் என நீதிபதி தெரிவித்துள்ளதாக கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது. கூட்டுத்தொகையில் உள்ள பிழையை சரிசெய்து பார்த்தால், ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 76.7 சதவீதம் சொத்து சேர்த்தது தெரியவரும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்த ஆவணத்தை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
 
கர்நாடாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, தனது தரப்பு வாதத்தை முன் வைக்க நீதிபதி குமாரசாமி அனுமதிக்கவில்லை என்பதையும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது. தனி நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில், 16 முக்கிய குறைபாடுகளை சுட்டிகாட்டி கர்நாடக அரசு, 7 பக்கங்கள் கொண்ட கூடுதல் ஆவணத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்