ராஜஸ்தான் பள்ளி படப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு வரலாறு நீக்கம்

ஞாயிறு, 8 மே 2016 (10:25 IST)
ராஜஸ்தான் மாநில 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
விற்பனைக்கு வராத இந்த புத்தகம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், வீர் சவார்கர், பகவத் சிங், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரது வரலாறுகள் இடம்பெற்று உள்ளது.
 
பாடத்திட்டத்தில் மறு சீரமைப்பு செய்த ராஜஸ்தான் மாநில பள்ளி கல்வித்துறை, ஜவஹர்லால் நேரு உட்பட பல காங்கிரஸ் கட்சியின் சுதந்திர போராட்ட வீரர்களின் விபரங்களை குறிப்பிடவில்லை என கூறியுள்ளது அந்த ஆங்கில பத்திரிகை.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கப்பட்ட இந்த விவகாரத்தில் அரசோ, நானோ செய்வதற்கு எதுவும் இல்லை. நான் புதிய பாட புத்தகங்களை இனிமேல் தான் பார்க்க உள்ளேன். படத்திட்டங்கள் ஒரு தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்படுகிறது, மாநில அரசு இதில் தலையிடாது என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்