”சிந்தியுங்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள்” காஷ்மீர் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் மாநில அரசு

Arun Prasath

சனி, 12 அக்டோபர் 2019 (13:14 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது காஷ்மீர் மக்களை இயல்பு நிலைக்கு திரும்புங்கள் என மாநில அரசு விளம்பரம் செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது பதற்றம் நீங்கியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் கடைகளை திறக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என மாநில அரசு பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில், “நாம் பயங்கரவாதிகளுக்கு அடிமையாக போகிறோமா? சிந்தியுங்கள்!! கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். பிரிவினைவாதிகள் பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அதே வழியை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதை நாம் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள வேண்டும் ?? என கூறப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் நமது தொழிலை, வாழ்வாதாரத்தை, கல்வி உரிமையை, குழந்தைகளின் எதிர்காலத்தை, கெடுக்க நாம் அனுமதிக்கமதிக்க வேண்டுமா? காஷ்மீர் நமது வீடு, இந்த வீட்டின் நலன் மற்றும் வளம் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்