ஜல்லிக்கட்டிற்கான அனுமதிக்கு எதிர்ப்பு: வழக்கு தொடர விலங்குகள் நல அமைப்பு முடிவு

வெள்ளி, 8 ஜனவரி 2016 (14:22 IST)
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில்,  ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு முன்னர் விலங்குகள் நல வாரியத்திடம் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை விலங்குகள் நல அமைப்பன பீட்டா கூறியுள்ளது.
 
இந்நிலையில், அவ்வாறு ஆலோசிக்காமல் இந்த அனுமதி, வழங்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது கூறியுள்ளது.
 
எனவே, ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்