ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரக்கூடாது: குடியரசுத் தலைவருக்கு பீட்டா கடிதம்

வியாழன், 14 ஜனவரி 2016 (08:15 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரக்கூடாது என்று கூறி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கடிதம் எழுதியுள்ளது.



 


 
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
இந்நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
 
இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
 
அந்த கடிதத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. 
 
காளைகளை பாதுகாக்க வேண்டுமானால், அத்தகைய அவசர சட்டம் எதையும் தாங்கள் பிறப்பிக்க வேண்டாம்.
 
மேலும், இது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு பீட்டா கூறியுள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்றும், இதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும், மநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்