அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் - அவதூறு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம்

புதன், 24 பிப்ரவரி 2016 (12:09 IST)
அரவிந்த் கெஜ்ரிவால் மீது நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்ப முடிவெடுத்துள்ளது.
 

 
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக, அருண் ஜெட்லி பதவி வகித்த போது, பல கோடி ரூபாய் ஊழல்கள் நடைபெற்றதாக டெல்லி முதலமைச்சசர் அர்விந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி தலைமை செயலகத்தில் திடீர் சோதனை செய்த சிபிஐ காவல்துறையினர் அருண் ஜெட்லி குறித்த ஆவணைங்களை எடுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இதனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆதாரமற்ற தகவல்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டு வருவதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 6 பேர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
 
இதில் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக, மார்ச் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக புதுடெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி 13 ஆண்டுகாலம் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்