இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார்

திங்கள், 21 செப்டம்பர் 2015 (07:41 IST)
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெக்மோகன் டால்மியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 
 
கொல்கத்தாவில் கடந்த 17 ஆம் தேதி ஜெக்மோகன் டால்மியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  அங்குள்ள பி.எம். பிர்லா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஜெக்மோகன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
 
மாரடைப்பால் காலமான ஜெக்மோகன் டால்மியாவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டூவிட்டர் பக்கத்தில் "ஜெக்மோகன் டால்மியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்".
 
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் ஜெக்மோகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்