இந்தியாவில் வழிபாட்டு தளங்களிலும் வணிக வளாகங்களில் குண்டு வைக்க திட்டம்: ஐ எஸ் தீவிரவாதிகள் 11 பேர் கைது

திங்கள், 4 ஜூலை 2016 (16:26 IST)
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், செல்போன், லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 பேர் நேரடியாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது என்பது தெரியவந்ததுள்ளது. அவர்கள் நாட்டின் பல இடங்களில் மத கலவரத்தை தூண்டிவிட்டு ஆன்மீக வழிபாட்டு தளங்களிலும் வணிக வளாகங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தது விசாரனையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை என்ஐஏ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள், பாரீஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தீவிரவாதிகளின் வசமிருந்து இந்த வகை வெடிபொருள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து திருப்பதி ஏழு மலையான் கோயில் உள்பட ஆந்திராவில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


 

வெப்துனியாவைப் படிக்கவும்