ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தற்போது கூகுள் விளம்பரமும் வருகிறது. இந்த விளம்பரத்தின் மூலமும் எக்கச்சக்க வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆனந்தகுமார் என்ற வாடிக்கையாளர் ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகளுக்கும், ரயில்வே அமைச்சருக்கும் ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் நான் டிக்கெட் புக்கிங் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் லாகின் செய்தபோது ஆபாச விளம்பரங்கள் வருவதாகவும், இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த புகாரில் அவர் பதிவு செய்திருந்தார்.
இந்த புகாருக்கு பதில் அனுப்பிய ஐ.ஆர்.சி.டி.சி, "ஐஆர்சிடிசி கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்தி வருவதாகவும், அந்த விளம்பரங்கள் பயனாளிகள் ஏற்கனவே இணையத்தில் பார்த்த விஷயங்களை சார்ந்தே வரும் என்றும் கூறியுள்ளது. அதாவது ஒரு நபர் ஆபாச இணையதளங்களை அதிகம் பார்த்திருந்தால் அவருடைய ஹிஸ்ட்ரியை வைத்தே அவருக்கு வரும் விளம்பரங்களும் இருக்கும் என்பதே இதற்கு அர்த்தம். எனவே ஆனந்தகுமார் அடிக்கடி ஆபாச தளங்களை பார்த்ததால்தான் அவருக்கு இந்த விளம்பரங்கள் வந்திருப்பதாக அந்த பதிலில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.