இந்திரா காந்தி கொலை வழக்கு 29 வருடங்களுக்குப் பின்பு தள்ளுபடியானது

புதன், 1 ஜூலை 2015 (01:21 IST)
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை, தற்கொலையாக அறிவிக்க கோரிய வழக்கு 29 வருடங்களுக்கு பின்பு, நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
 

 
பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்த சயமத்தில், சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையும் என இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இதனால், இந்திரா காந்தி, படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார்.
 
1984 ஆம் ஜூன் மாதம், ஜர்னல் சிங் பிந்தரன்வாலேயின் சிக்கிய சுந்திர போராட்டக் பிரிவினைவாத குழு, சீக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது. இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசால் மேற்கொள்ளப்பட்டது.
 
சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார்.
 
பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இருந்த போதிலும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது.
 
இந்த சம்பவம் தான் இந்திராவை சீக்கியர்களின் பெரும் கோபத்துக்கு ஆளாக்கியது. இந்த நிலையில், இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்த சமயத்தில், அவர்களில் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் இருவர் சீக்கியர்கள்.
 
கடந்த 31-10-1984 அன்று, இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் இருவர் சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது கொலை அல்ல தனது மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்க இந்திரா காந்தியின் தற்கொலை முயற்சியாக இதை அறிவிக்க வேண்டும் என குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவ்னிதால் ஷா என்பவர் கடந்த 1986ஆம் ஆண்டு குஜராத் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 29 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் மனுதாரர் தொடர்ந்து ஆஜராகாததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என கூறி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்