ஐபிஎல்க்கு சிறப்பு ரயில்.. நீட் மாணவர்களுக்கு இல்லையா?

வெள்ளி, 4 மே 2018 (18:35 IST)
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இதன் தீர்ப்பு சிபிஎஸ்இக்கு எதிராக வந்தது. இதன் பின்னர், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் மாணவர்கள் பலர் கஷ்டத்தில் உள்ளனர். தமிழக அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் நிதிஉதவீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதோடு நடிகர், நடிகைகள் பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். 
 
இந்நிலையில், வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்கப்படுமா என்று கேள்வி எழுந்தள்ளது. அதற்கு அதில் நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும், இது குறித்து ரயில்வே தரப்பு கூறியதாவது, புனேவிற்கு சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது. தற்போது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய போதுமான ரயில்கள் கைவசம் இல்லை. 5,000 பேருக்கு திடீர் என்று ரயில் ஒதுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சிறப்பு ரயில் ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்