பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் 42 ஆண்டு கோமாவிற்கு பின் மரணம்

திங்கள், 18 மே 2015 (21:33 IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவர் 42 ஆண்டுகள் கோமா வாழ்க்கைக்கு பிறகு மரணம் அடைந்துள்ளார்.
 
கடந்த 1973 ஆம் ஆண்டு அருணா என்ற பெண் செவிலியராக மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது, அவருடன் பணி புரியும் பணியாளர் ஒருவரால், அவர் கற்பழிக்கப்பட்டதோடு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இதனால் அவரது மூளை செயலிழந்தது.


 
அன்றுலிருந்து இன்று வரை நினைவு திரும்பாமல் கோமா நிலையிலேயே வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கடந்த 2011ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
 

 
இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அருணா ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்து உயிர் நீத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்