துப்பாக்கி முனையில் இந்திய பெண் கடத்தல் : ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி

வெள்ளி, 10 ஜூன் 2016 (13:14 IST)
கொல்கத்தாவை சேர்ந்த இந்திய பெண் ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டில் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார். அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.


 

 
கொல்கத்தாவை சேர்ந்த ஜூடித் டிசோசா(40) சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலுக்கு சென்றிருந்தார். இவர் அகா கான் பவுண்டேசனில் சீனியர் டெக்னிகள் அட்வைசராக பணி புரிந்து வருகிறார்.  
 
காபுல் நகரின் உள்ள தாய்மனி என்ற பகுதியில் அவரை சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இதுவரை எந்த தீவிரவாத குழுவும் இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்கவில்லை.
 
அவரை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  ஜூடித்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இருப்பினும், அவரை மீட்பதற்கு அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், அங்கு செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் சமீபத்தில் எச்சரித்திருந்தது.
 
இருப்பினும், இந்திய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்