கல்லூரி காலத்தில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர், இன்று கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தோல்வி ஆரம்பத்தில் அவரது தன்னம்பிக்கையை சிதைத்தாலும், அவர் முயற்சியை கைவிடவில்லை. தனது தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அவர், அடிப்படை விஷயங்களை மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினார்.
தினமும் மணிக்கணக்கில் படிக்காமல், சீரான இடைவெளியில் ஒன்றிரண்டு கணக்குகளுக்கு தீர்வு காண்பதை வழக்கமாக்கி கொண்டார். பல நேர்காணல்களில் நிராகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நிராகரிப்பையும் தனது குறைகளை திருத்தி கொள்ளும் வாய்ப்பாகவே பார்த்தார்.
அவரது விடாமுயற்சியின் பயனாக, தற்போது லண்டனில் உள்ள கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் உபெர் போன்ற நிறுவனங்களில் இருந்து அவருக்கு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
ஒரு தோல்வியோ அல்லது குறைந்த மதிப்பெண்ணோ ஒருவருடைய எதிர்காலத்தை தீர்மானிக்காது என்பதற்கு கார்த்திக்கின் வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, சவால்களை சந்திக்கும் பல மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.