அமிர்தசரஸ் பொற்கோவிலில் கத்தி, ஈட்டிகளுடன் சண்டையிட்ட சீக்கியர்கள்(படங்கள்)

Suresh

வெள்ளி, 6 ஜூன் 2014 (12:30 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் இரு பிரிவினர்கள்களிடையே நடந்த மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 


 


1984 ஆம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அங்கு ராணுவம் நுழைந்து 30 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, இது தொடர்பான விவாத கூட்டம் பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது. இதில் சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கட்சியினரும் பங்கேற்றனர்.

அப்போது ‘புளுஸ்டார் ஆப்ரேஷன்’ என்று அழைக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஐநா குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பியுள்ளனர். அப்போது கூட்டத்தில் பேச சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து வாள் மற்றும் ஈட்டி போன்ற ஆயுதங்களால் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர்.
 
இந்த தாக்குதலில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அமிர்தசரஸ் பொற்கோவிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்