5 நாட்களுக்குள் 2 முறையாக ஏவுகணை சோதனை !

செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:04 IST)
ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது இந்தியா. 
 
இந்தியா தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை (Quick Reaction Surface to Air Missile) சோதனையை கடந்த 13 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியது. 
 
தற்போது மீண்டும் இந்த ஏவுகணையை இன்று நடத்தியது. கடந்த ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல சோதனைகளை இந்தியா சமீப காலமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்