இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் போர்: இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பகீர் தகவல்

புதன், 2 செப்டம்பர் 2015 (13:29 IST)
இந்தியா பாகிஸ்தான் இடையே எதிர் காலத்தில் மீண்டும் குறுகிய கால போர் வரலாம் எனவும், அதற்காக இந்தியா தயாராகி வருகிறது எனவும் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் கூறினார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற 1965 ஆம் ஆண்டின் இந்தியா–பாகிஸ்தான் போர் பற்றிய முப்படை வீரர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட இந்திய ராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் புதிய யுக்திகள் மூலம் பாகிஸ்தன் ராணுவம் காஷ்மீர் பகுதியில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது எனவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல், மற்றும் ஊடுருவல்  முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் கூறினார்.

பாக்கிஸ்தான் ராணுவம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 55 முறை போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டது, 2015 ல் இது வரை 250 முறை போர் விதிமீறலில் ஈடுபட்டது, 2014 ஆம் ஆண்டில் 583 என உச்சத்தை தொட்டது, 2013 ஆம் ஆண்டில் 347 முறை போர் நிறுத்த  மீறலில் ஈடுபடுள்ளது.

இந்த வன்முறை மீறல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க இந்தியா எச்சரிக்கையாக இருந்து குறுகிய கால போருக்கு தயாராக வேண்டிய நேரமிது என ராணுவ தளபதி ஜெனரல் தல்பிர் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்தியாவின் பாதுகாப்பு சிக்கலாகவே உள்ளது எனவே எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்