ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முக்கிய முன்னேற்றமாக, புனேவை தலைமையிடமாக கொண்ட இந்திய நிறுவனமான நைபே, யூனிவர்சல் ராக்கெட் லாஞ்சர்களை தயாரித்து வழங்கும் 150.6 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இவை 300 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டவை. இந்நிறுவனம் இந்த ராக்கெட் லாஞ்சர்களை இஸ்ரேலுக்கு வழங்க இருக்கிறது. ஒப்பந்தத்தின்படி, நவம்பர் 20க்குள் அனைத்து உற்பத்தியும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நைபே லிமிடெட் என்பது பாதுகாப்பு துறைக்கான நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் இந்திய நிறுவனம். மேக் இன் இந்தியா, சுயநிர்ப்பந்தமான இந்தியா ஆகிய திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில், இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த ஆர்டர் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் மே 23 வெள்ளிக்கிழமை 0.84% உயர்ந்தன.
சீனாவின் ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் தாக்கிய போது அதை மிக எளிதாக இந்தியா தடுத்து நிறுத்தி இந்தியாவுக்கு ஒரு சின்ன சேதம் கூட ஏற்படாமல் பார்த்துக் கொண்டது, அதனால் தான் இந்தியாவுக்கு தற்போது ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்கும் ஆர்டரை இஸ்ரேல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.