4 முஸ்லீம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுதலை

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (17:26 IST)
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு மறு நாள் குஜராத் மாநிலம் சபர்கந்த் மாவட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத், உள்ளூர் ஓட்டுநர் யூசூப் சுலைமான் ஆகியோர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் நடைபெற்ற கலவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 3 பேரும் உள்ளூர்வாசி ஒருவரும் ஒரு கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்படனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
வழக்கில் கைது செய்யப்பட்ட மிதன்பாய் படேல், சந்து, பிரஹலாத் படேல், ரமேஷ் படேல், மனோஜ் படேல், ராஜேஷ் படேல், காலாபாய் படேல் உட்பட 6 பேரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
81 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 3 நேரடி சாட்சியங்கள் பிறழ் சாட்சியமாக மாறிய நிலையில் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்