முத்தூட் நிறுவனங்களில் அதிரடி ரெய்டு: கருப்பு பண பதுக்கல் புகார்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (11:27 IST)
முத்தூட் நிதி நிறுவனத்தின் முக்கியமான அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அதிக அளவில் தங்க நகைக்கடன் வழங்கும் நிறுவனம் முத்தூட் நிறுவனம்.


 
 
முத்தூட் பைனான்ஸ், முத்தூட் மினி, முத்தூட் பச்சப்பன் என்ற நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குகின்றன. முத்தூட் குழுமத்தின் மொத்த வர்த்தகத்தில் தங்க நகைக்கடன் 90 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனம் கொச்சியை தலைமையமாக கொண்டுள்ளது.
 
நாடு முழுவதும் உள்ள முத்தூட் கிளைகளில் 85 சதவீதம் தென் மாநிலங்களிலேயே உள்ளன. நாடு முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்த நிறுவனத்தில் 30000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
 
இந்நிலையில் முத்தூட் நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தவில்லை என்பதால் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முத்தூட் பின்கார்ப், முத்தூட் பச்சப்பன் நிறுவனங்களிலும் மினி முத்தூட், முத்தூட் மெர்க்கண்டைல் நிறுவனங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தங்க நகைக்கடன் கொடுப்பதில் முறைகேடு மற்றும் கருப்பு பண பதுக்கல் தொடர்பாக எழுந்த புகாரினை அடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்